சோழிங்கநல்லூரில் 6-வது மாடியில் இருந்து குதித்து காவலாளி தற்கொலை

சோழிங்கநல்லூரில் 6-வது மாடியில் இருந்து குதித்து காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-09-26 22:00 GMT
சென்னை,

சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் தேபஜித்பாரு(வயது 30). துரைப்பாக்கத்தில் வாடகைவீட்டில் தங்கியிருந்த அவர் கடந்த திங்கட்கிழமை வழக்கம் போல் இரவு பணிக்கு சென்றார். பணியில் இருந்த தேபஜித்பாரு நேற்று முன்தினம் அதிகாலை சாப்ட்வேர் நிறுவனத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செம்மஞ்சேரி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் தேபஜித்பாருவின் செல்போனை கைப்பற்றி கடைசியாக அவரிடம் பேசியவர்கள் யார் என்பது குறித்தும் காதல் தோல்வியால் காவலாளி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்