2 லட்சம் பனங்கொட்டைகள் நட திட்டம் கலெக்டர் தகவல்
கரூர் மாவட்டத்தில் 2 லட்சம் பனங்கொட்டைகள் நட திட்டமிடப்பட்டுள்ளது என்று மக்கள் தொடர்பு திட்ட நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
உப்பிடமங்கலம்,
வெள்ளியணை அருகே உப்பிடமங்கலம் மேல்பாகம் கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட நிறைவு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு, 172 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 34 ஆயிரத்து 226 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மானாவாரி பயிர்செய்யும் விவசாயிகள் அரசின் தரமான விதைகளை மானியத்தில் பெற்று மகசூல் செய்ய தயாராக இருக்க வேண்டும். அத்துடன் தங்களது விளைநிலத்தில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்றாற்போல பயிர் செய்ய வேண்டும். மழைக்காலம் தொடங்குவதால் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நிலவேம்பு குடிநீர் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகிறது. அனைவரும் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை பொதுமக்கள்அனைவரும் அரசு மருத்துவமனையில் வழங்கும் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.
மேலும் மனிதர்களை போலவே கால்நடைகளுக்கும் குடற்புழு நீக்க முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புத்துறையின் மூலம் வழங்கப்படும் திறன் வளர்ப்பு பயிற்சியை இளைஞர்கள் பெற்று அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற முன்வர வேண்டும். மழைக்காலத்தில் வளருவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் 2 லட்சம் பனங்கொட்டைகளை மாணவ, மாணவிகளை கொண்டு நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் (கரூர்) சரவணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) குமரேசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன், ஆதிதிராவிட நல அதிகாரி லீலாவதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பரிமளாதேவி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி கவிதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஜான்சி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி மல்லிகா, தாசில்தார் ஈஸ்வரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.