3 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று கணவர் கூறியதால் 3 குழந்தைகளின் தாய் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலை பகுதியை சேர்ந்தவர் நாராயணன் என்கிற பிரகாஷ். தவிடு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பசுமதி(வயது 32). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 3 பேருமே பெண்ணாய் பிறந்து விட்டதால், அவர் களை எப்படி காப்பாற்றி கரை சேர்ப்பது? என்பதை நினைத்து தம்பதியினர் அடிக்கடி கவலை அடைந்தனர். இந்த நிலையில், தனக்கு ஆண்குழந்தை வேண்டும் என்றும், இதற்காக வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக நாராயணன் பசுமதியிடம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கமும் இருந்ததாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பசுமதி நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பசுமதியின் தந்தை பிச்சை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் குளித்தலை அரசு மருத்துவமனையில் பசுமதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க தயார் நிலையில் இருந்தது. அப்போது பசுமதியின் கணவர் நாராயணன் இதுவரை மருத்துவமனைக்கு வரவில்லை. அவர் தான், தற்கொலைக்கு முழுகாரணம். அவரே நேரில் வந்து தனது மனைவியின் உடலை பெற்று ஈமக்காரியங்கள் செய்யவேண்டும் என போலீசாரிடம் தெரிவித்ததோடு உடலை வாங்க மறுத்தனர். அவர்களிடம் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் திருச்சி - கரூர் சாலையில் குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு திடீரென மறியல் போராட்டத்தில் பசுமதியின் உறவினர்கள் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி நாராயணன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் மறியலை கைவிட்டனர்.
பின்னர் பசுமதியின் உடல் அவரது தந்தை பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டு அய்யர்மலையில் தகனம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாராயணன் தான் பழகிவந்த பெண்ணை அழைத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.