அறச்சலூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது 50 பயணிகள் உயிர் தப்பினர்

அறச்சலூர் அருகே தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 50 பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2018-09-26 22:30 GMT

அறச்சலூர்,

ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார் (வயது 30) என்பவர் ஓட்டினார். அறச்சலூர் வடபழனி அருகே ஒரு வளைவில் பஸ் திருப்ப முயன்றது.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் நிலைதடுமாறி பஸ் ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி 50 பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர். பின்னர் இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றனர்.

இந்த விபத்து குறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்