வயலப்பாடி கிராமத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம்
இலவச வீட்டு மனையை அளந்து கொடுக்காததையும், நீதிமன்ற ஆணையை நடைமுறைபடுத்தாத தனி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வயலப்பாடி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை அளந்து கொடுக்காததையும், நீதிமன்ற ஆணையை நடைமுறைபடுத்தாத தனி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வயலப்பாடி சாலையின் இருபுறமும் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். உண்ணாவிரத போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மாவட்ட செய்திதொடர்பாளர் உதயகுமார் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மஞ்சுளா, குன்னம் தாசில்தார் சிவா, மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு குமரவேல், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மே மாதம் 5-ந்தேதி அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.