கோவில் திருவிழாவை 3 நாட்கள் நடத்த அனுமதி கோரி கிராம மக்கள்- இந்து முன்னணியினர் உண்ணாவிரதம்
வி.களத்தூர் செல்லியம்மன் கோவில் திருவிழாவினை 3 நாட்கள் நடத்த அனுமதிக்கோரி கிராம மக்கள்-இந்து முன்னணியினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்த்தில் கலந்து கொண்ட பெண்களில் 4 பேர் திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூர் கிராம பொதுமக்கள், இந்து முன்னணி என்கிற அமைப்பினருடன் சேர்ந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு நேற்று காலை திரண்டு வந்து சாமியானா பந்தல் அமைத்து வி.களத்தூர் வசிக்கும் இந்துக்களுக்கு அநீதி என்கிற தலைப்பில் நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும் வி.களத்தூரில் செல்லியம்மன் கோவில் திருவிழாவினை எவ்வித தடையுமின்றி நடைபெற மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் அனுமதி கொடுக்க வேண்டும். செல்லியம்மன் கோவில் பெரிய தேரோட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரோட்டம் நடைபெறும் ராஜவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
வி.களத்தூர் கிராமத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களில் 4 பேர் திடீரென்று மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை அந்த பெண்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உண்ணாவிரத போராட்டத்தில் இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் நடராஜன், திருச்சி கோட்ட செயலாளர்கள் குணா, ராஜசேகர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வி.களத்தூர் கிராம மக்களின் கோரிக்கைகைகளை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். நேற்று காலையில் தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலையில் முடிவடைந்தது. உண்ணாவிரத போராட்டம் நடந்த இடத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.