ஆயக்கட்டு வாய்க்கால் சீரமைப்பு: 585 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி
நொய்யல் பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால் சீரமைக்கப்பட்டுள்ளதால் 585 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளதாக கலெக்டர் ஹரிகரன் தெரிவித்து உள்ளார்.
கோவை,
தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் நரசீபுரம் ஊராட்சி, புதுக்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிமராமத்து பணிகள் குறித்து கலெக்டர் ஹரிகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
கோவை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டம் மற்றும் ஏரி, குளங்களை தூர்வாரி, விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் இந்த ஆண்டு பருவமழையின் போது நீர்நிலைகளில் போதிய அளவு தண்ணீர் சேமிக்க முடிந்தது.
வெள்ளிங்கிரி மலையில் உற்பத்தியாகி, காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்று தண்ணீர் வீணாகாமல் விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் நொய்யல் பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால் சீரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் இருந்து நொய்யல் ஆற்றின் பாசன வாய்க்கால் சீரமைக்கப்பட்டு, புதிய மதகு கட்டப்பட்டது. மேலும் அடைப்புகளும் நீக்கப்பட்டன.
இதனால் புதுக்காடு, ஜகீர்நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள 585 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன்மூலம் இப்பகுதியின் விவசாயம் செழிக்கும். நீராதாரங்களை பெருக்கும் வகையில் அரசு திட்டங்களைச் செயல்படுத்தினாலும் பொதுமக்கள் இத்திட்டங்களின் பயன்களை முழுவதும் உணர்ந்து ஏரிகள், குளங்களில் பிளாஸ்டிக் பொருட்களை கொட்டக்கூடாது. மேலும் குளக்கரையில் குப்பைகள் மற்றும் கட்டிடக்கழிவுகளை கொட்டுதல் போன்றவற்றினை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.