அம்மன்புரத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் அனுசரிப்பு திரளானவர்கள் அஞ்சலி செலுத்தினர்
அம்மன்புரத்தில் வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி,
அம்மன்புரத்தில் வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நினைவு தினம்
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் மூலக்கரை என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 15-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காலையில் பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது.
தொடர்ந்து வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவிடத்தில் அவரது மனைவியும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராதிகா செல்வி, மகன் ரக்ஷன் பண்ணையார், வெங்கடேஷ் பண்ணையாரின் சகோதரி ஜானகி, அவருடைய கணவர் மகாலிங்கம், கோசலை பண்ணையார், துரைப்பாண்டியன் பண்ணையார், ஆத்திக்கண் பண்ணையார், பி.எஸ்.ரத்தினம் நாடார், ராதிகா செல்வியின் தாயார் தங்கத்தாய் அம்மாள், சகோதரர் குமரன் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவிடம் அருகில் 108 பெண்கள் பொங்கலிட்டு படைத்து வழிபட்டனர். பழையகாயல், மூலக்கரையில் இருந்து ஏராளமானவர்கள் பால் குடம் எடுத்து வந்து, நினைவிடத்தில் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
நற்பணி இயக்கம்
தொடர்ந்து வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க மாநில தலைவர் எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நற்பணி இயக்க மாநில செயலாளர் சொர்ணவேல் குமார், துணை செயலாளர் சிவ செல்வராஜ், முன்னாள் மாநில செயலாளர் ஓடை செல்வன், ஈரோடு மாவட்ட தலைவர் ஜான்சன், நாகர்கோவில் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஆர்.சிங்,
ஆறுமுகநேரி நகர தலைவர் கிளாட்சன், செயலாளர் தினகர பாண்டியன், பொருளாளர் இசக்கிமுத்து, துணை தலைவர் மகராஜன், மதுரை மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், தேனி மாவட்ட பொறுப்பாளர் பெரிய ஆண்டவர், அருப்புகோட்டை பொறுப்பாளர் பொன்ராஜ், சென்னை மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ஏ.சி.துரை, ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் பொன்மணி, தூத்துக்குடி மாநகர தலைவர் சக்திவேல், வக்கீல் ரூபராஜா, அஸ்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாடார் சங்கம்
தட்சணமாற நாடார் சங்க தலைவர் சபாபதி, செயலாளர் சண்முகவேல், பொருளாளர் ரத்தினகுமார், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் காமராஜ், சவுந்திர பாண்டியன், நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, தெற்கு மாவட்ட தலைவர் காமராசு,
நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், வக்கீல் பாலகணேசன், காமராஜர் ஆதித்தனார் கழக மாநில பொறுப்பாளர் எஸ்.எஸ்.எஸ்.சிங், கராத்தே செல்வின் நாடார் நற்பணி இயக்க நிர்வாகி செட்டிக்குளம் ராஜ், அகில இந்திய நாடார் இளைஞர் கூட்டமைப்பு தலைவர் அந்தோணி, ராஜேஷ்,
சென்னை செங்குன்றம் வியாபாரிகள் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், நெல்லை, தூத்துக்குடி நாடார் பரிபாலன மகமை சங்க துணை தலைவர் செல்வகுமார், செயலாளர் சந்திரன் ஜெயபால், ஆத்தூர் சுற்று வட்டார நாடார் சங்க தலைவர் தாமோதரன், துணை தலைவர் ராமநாதன், இணை செயலாளர் முத்து கிருஷ்ணன், பொருளாளர் தங்கராஜ்,
ஆறுமுகநேரி ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் துரை, பொருளாளர் சேர்மலிங்கம், உறுப்பினர் பாஸ்கரன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செந்தமிழ் செல்வன், காயல்பட்டினம் வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல் காதர், ஏரல் வியாபாரிகள் சங்க செயலாளர் ரவிசங்கர்,
தி.மு.க.-காங்கிரஸ்
தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், மாநில மகளிர் அணி துணை செயலாளர் சிம்லா முத்துசோழன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி நகர செயலாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் ராஜசேகர், மணல்மேடு சுரேஷ், ஏரல் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் காளிதாஸ் பண்ணையார், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சுதாகர், த.மா.கா. வட்டார தலைவர் சுந்தரலிங்கம், சமத்துவ மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர்கள் சுந்தர், கணேசன், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன், ராஷ்ட்ரிய ஜனதா கட்சி மாநில தலைவர் எஸ்.எஸ்.மணியன்,
அ.ம.மு.க.- பா.ஜ.க.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், நெல்லை மாநகர செயலாளர் கல்லூர் வேலாயுதம், ஆத்தூர் நகர செயலாளர் முருகானந்தம்,
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாலாஜி, செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஆறுமுகநேரி நகர தலைவர் மகேந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் சிவஞானம், ஆறுமுகநேரி நகர தலைவர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் ராமசாமி உள்பட திரளானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பாதுகாப்பு
மூலக்கரையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆறுமுகநேரி, தெற்கு ஆத்தூர், குரும்பூர் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், சுமார் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.