கோவில்பட்டியில் ஆக்கிரமிப்பு கடைகள் அளவிடும் பணி

கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் அளவிடும் பணி நேற்று நடந்தது.

Update: 2018-09-26 22:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் அளவிடும் பணி நேற்று நடந்தது.

ஓடை ஆக்கிரமிப்பு

கோவில்பட்டி மெயின் ரோட்டில் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, 5-வது தூண் அமைப்பு மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில், கோவில்பட்டி வருவாய் துறை, நகரசபை நிர்வாகம் இணைந்து, நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணி நேற்று நடந்தது.

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, நகரசபை ஆணையாளர் அட்சயா, நகரமைப்பு அலுவலர் காஜா மைதீன், தாசில்தார் பரமசிவன், தலைமை நில அளவையர் சுடலைமுத்து, வருவாய் ஆய்வாளர்கள் மோகன், சேகர், குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் அபிராமசுந்தரி, போத்திராஜ் மற்றும் அதிகாரிகள், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை பார்வையிட்டனர்.

அளவிடும் பணி

ஓடை ஆக்கிரமிப்பில் செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான 108 கடைகளும், 26 தனியார் கடைகளும் உள்ளன. அவற்றை அதிகாரிகள் அளவிடு செய்தனர். மழைக்காலங்களில் ஓடையில் மழைநீர் வழிந்தோட வழி உள்ளதா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

பின்னர் அதிகாரிகள் கூறுகையில், கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய் துறை, நகரசபை நிர்வாகம் இணைந்து அறிக்கை தயார் செய்து, இன்னும் 2 நாட்களில் மாவட்ட கலெக்டருக்கு வழங்குவோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்