பாதுகாப்பு காரணங்களுக்காக ரூ.3 கோடி செலவில் மந்திராலயாவில் புதிய சுற்றுச்சுவர் 10 அடி உயரத்துக்கு அமைக்கப்படுகிறது
ரூ.3 கோடி செலவில் மந்திராலயாவில் புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. இந்த சுற்றுச்சுவர் 10 அடி உயரத்துக்கு அமைக்கப்படுகிறது.
மும்பை,
ரூ.3 கோடி செலவில் மந்திராலயாவில் புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. இந்த சுற்றுச்சுவர் 10 அடி உயரத்துக்கு அமைக்கப்படுகிறது.
மந்திராலயா
மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா கட்டிடம் மும்பை நரிமன்பாயிண்ட்டில் உள்ளது. மாநில அரசின் அலுவல் செயல்பாடுகள் நடைபெறும் இந்த கட்டிடத்தில் அரங்கேறிய தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி போன்ற அசாதாரண நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மந்திராலயா கட்டிடத்தை சுற்றி புதிதாக 10 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட மாநில அரசு முடிவு செய்தது.
677 மீட்டர் நீள சுற்றுச்சுவர்
ரூ.3 கோடி செலவில் இந்த சுற்றுச்சுவர் 677 மீட்டர் நீளத்துக்கு கட்டப்படுகிறது. இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை செய்கிறது. இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மந்திராலயாவின் புதிய சுற்றுச்சுவர் அடித்தளத்தில் இருந்து 2 அடி உயரத்துக்கு கான்கிரீட் கொண்டு கட்டப்படும். அதற்கு மேல் கட்டிடத்தை சுற்றிலும் 8 அடி உயரத்துக்கு இரும்பு கம்பிகளால் ஆன கிரில்கள் அமைக்கப்படும்.
புதிய சுற்றுச்சுவரின் ஒவ்வொரு 20 மீட்டர் இடைவெளியிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மின்விளக்குகள் பொருத்தப்படும். புதிய சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது’’ என்றார்.