13-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
13-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத்தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ரவி, பொருளாளர் கோவிந்தராஜன், திருவாரூர் கிருஷ்ணமூர்த்தி, மன்னார்குடி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியத்துக்கு அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி மாதந்தோறும் 1-ந் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும், 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 13-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.