பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
பல்கலைக்கழக தேர்வு கட்டணத்தை உயர்த்தியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் சான்றிதழ் வரவில்லை. உடனடியாக கல்லூரி நிர்வாகம் மதிப்பெண் சான்றிதழை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு இதுவரை முழுமையாக பாடத்தை முடிக்காமல் முன்கூட்டியே மாதிரி தேர்வினை கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு படம் முழுவதும் நடத்தியவுடன் தேர்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க பிரநிதிகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.