ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த திட்டங்களுக்கு தமிழக ஆட்சியாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த திட்டங்களுக்கு தமிழக ஆட்சியாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என டி.டி.வி. தினகரன் கூறினார்.

Update: 2018-09-25 23:00 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடந்த 3 நாட்களாக பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வேளாங்கண்ணியில் நேற்று முன்தினம் டி.டி.வி. தினகரன் பிரசார பயணத்தின் போது திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் 2 கோடியாக உயர்த்த நிர்வாகிகள் தீவிரமாக பணியில் ஈடுபட வேண்டும். தமிழகத்தில் விவசாயத்தை பாதிக் கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் தற்போது உள்ள ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு பயந்து அந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றை தூர்வாராததால் டெல்டா மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருவதால் மனமுடைந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

500 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை சேமித்து வைத்தால் விவசாயிகள் பயன்படுவார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும்.

பிரசார பயணத்தின் போது கட்சியின் மண்டல செயலாளர் துரைக்கண்ணு, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் கிங்ஸ்லி ஜெரால்டு, மாவட்ட இணை செயலாளர் ரவிச்சந்திரன், நாகை தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரமோகன், திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்