வேறு ஆணுடன் செல்போனில் பேசியதை கண்டித்த கணவருக்கு வெட்டு மனைவி வெறிச்செயல்

வேறு ஒரு ஆணுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியதை கண்டித்த கணவரை, மனைவி அரிவாள்மனையால் வெட்டினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-09-25 22:15 GMT
அடையாறு,

சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டத்தை சேர்ந்தவர் கபாலி (வயது 49). இவரது மனைவி கல்பனா (30). நேற்று முன்தினம் மாலை கபாலி மது அருந்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, கல்பனா யாரோ ஒரு ஆணிடம் நீண்ட நேரமாக செல்போனில் பேசியதாக தெரிகிறது.

இதனால் கோபம் அடைந்த கபாலி மனைவியை கண்டித்தார். அப்போது கபாலிக்கும், அவரது மனைவி கல்பனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கல்பனா அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து கபாலியின் நெற்றி மற்றும் இடது கையில் வெட்டினார்.

போலீசில் புகார்

வலியால் அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர், தனது மனைவி கல்பனா செல்போனில் அதிக நேரம் வேறு ஒரு ஆணுடன், வேலை செய்யும் இடத்தில் ஒரு வாலிபருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதை தட்டிக்கேட்ட தன்னை அரிவாள்மனையால் வெட்டியதாகவும் மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்