குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ராயபுரம், சவுகார்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு

ராயபுரம், சவுகார்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2018-09-25 20:50 GMT
சென்னை, 

மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை என்ஜினீயர் ஆர்.சிவசண்முகம் சென்னை ராயபுரம் மற்றும் சவுகார்பேட்டை பகுதியில் ஆய்வு செய்தார். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் ஆய்வு நடத்தி, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு மழை நீர் சேகரிப்பு கட்டுமானம் இருக்கவேண்டியதன் அவசியம் குறித்தும், பராமரிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மழை நீர் சேகரிப்பு திட்டம் தண்ணீரின் தரத்தை மேம்படுத்துவதோடு, நிலத்தடி நீர் மட்டத்தையும் அதிகரிப்பதற்கு உந்துகோலாக இருக்கும் என்றும் ஆர்.சிவசண்முகம் குடியிருப்புவாசிகள், வணிக ரீதியிலான கட்டுமானங்களை வைத்திருப்பவர்களிடம் எடுத்து கூறினார். மழை நீர் சேகரிப்பு முறை மற்றும் பராமரிப்பது தொடர்பாக துண்டு பிரசுரங்களை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகள் வினியோகம் செய்தனர்.

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, நல்ல முறையில் பராமரித்து வருபவர்களுக்கு பட்டைகளை ஆர்.சிவசண்முகம் வழங்கினார். இந்த நிகழ்வின்போது பகுதி என்ஜினீயர் ராஜா மற்றும் பகுதி துணை என்ஜினீயர் பொன்னரசி உள்பட அதிகாரிகள் உடன் சென்றனர்.

மேற்கண்ட தகவல் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்