நாகர்கோவில் அருகே வேன் கவிழ்ந்து திருச்சி போலீசார் உள்பட 23 பேர் படுகாயம்
நாகர்கோவில் அருகே வேன் கவிழ்ந்து திருச்சி போலீசார் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர்.
நாகர்கோவில்,
இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் குமரி மாவட்ட கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர். குமரி கியூ பிராஞ்ச் போலீசார் இலங்கைத் தமிழர்கள், இலங்கை அகதிகள் உள்பட 13 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை இரணியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போதெல்லாம் 13 பேரும் திருச்சியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவது வழக்கம்.
இதேபோல் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சீலன் என்ற குணசீலன், கோபிநாத், தயாகரன், குருவிந்தன், தர்ஷன், சத்தியசீலன், ராபின் பிரசாத், தயானந்தன், காந்தரூபன், பிரபாகரன், சுதர்சன், அய்யா என்ற அருள் இன்பத்தேவர், யோககுமார் ஆகிய 13 பேரும் போலீஸ் வேனில் திருச்சியில் இருந்து குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்களின் பாதுகாப்புக்காக திருச்சி மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன், ஏட்டு பன்னீர்செல்வம், போலீஸ்காரர்கள் சங்கர், மோகன்தாஸ், எழில்குமார், சரத்குமார், ரீகன், சிவகுமார், பிரபாகரன் ஆகிய 10 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு அளித்து 13 பேரையும் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர்.
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பால வேலைகள் நடைபெறுவதால் இலங்கை அதிகள் வந்த வேன் ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூர், பூதப்பாண்டி, இறச்சகுளம் வழியாக களியங்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. மதியம் 12 மணி அளவில் இறச்சகுளத்துக்கும், அழகன்கோணம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் வேன் சென்றபோது எதிரே வந்த பஸ்சுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் வேனை சாலையோரமாக ஒதுக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக வேன் சாலை ஓரத்தில் வயல்கள் அமைந்திருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த 10 போலீசாரும், இலங்கை அகதிகள் உள்ளிட்ட 13 பேரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த நாகரகோவில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பிரபாகரன் என்ற போலீஸ்காரர் ஆகிய 3 பேரும் லேசான காயம் அடைந்தனர். மற்ற 7 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
அகதிகள் உள்ளிட்ட 13 பேரில் காந்தரூபன், யோககுமார், குருவிந்தன், அருள்இன்பதேவர், பிரபாகரன், சத்தியசீலன், தயாகரன், தயானந்தன் ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற 5 பேர் லேசான காயம் அடைந்தனர். விபத்து நடந்த விவரம் இரணியல் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் குமரி மாவட்ட போலீஸ் பாதுகாப்புடன் மாற்று வாகனம் மூலமாக திருச்சி போலீசாரும், இலங்கை அகதிகள் உள்ளிட்ட 12 பேரும் நேற்று மாலை திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் அருள் இன்பத்தேவர் மட்டும் சிகிச்சை முடிந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.