கிருஷ்ணகிரி வழியாக சேலம் சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர், கிருஷ்ணகிரி வழியாக சேலம் சென்றார்.;

Update: 2018-09-25 23:00 GMT
கிருஷ்ணகிரி,

முன்னதாக கிருஷ்ணகிரியில் ஆவின் மேம்பாலம் அருகில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதே போல கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் கட்சியினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங்கரை), சி.வி.ராஜேந்திரன் (பர்கூர்), முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வரவேற்பை தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவேரிப்பட்டணம், தர்மபுரி வழியாக சேலம் சென்றடைந்தார். முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி வழியாக சேலம் சென்றதை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்