மாநகராட்சி சாலைகளில் விடப்படும் கால்நடைகள் விலங்குகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் விடப்படும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு விலங்குகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-09-25 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் விடப்படும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு விலங்குகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

கால்நடைகள்

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறத்தலாக இருப்பதோடு, ஆபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

இது குறித்து தொடர்ந்து புகார் வந்த நிலையில் மாநகராட்சியால் கால்நடைகளை உரிய பட்டிகள் அமைத்து உரிமையாளர்கள் பராமரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

ஆனால், கால்நடைகள் சாலைகளில் திரிந்தவண்ணம் இருந்ததை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை ரோடு, வடக்கு ரதவீதி, மேற்கு காட்டன் ரோடு, புதிய பஸ் நிலையம், எட்டயபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த 9 மாடுகள் மாநகராட்சி பொது சுகாதார பிரிவு அலுவலர்களால் பிடிக்கப்பட்டு லெவிஞ்சிபுரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் கட்டப்பட்டு உள்ளது.

அபராதம் செலுத்தி....

அந்த மாடுகளின் உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தி மாடுகளை மீட்டுக்கொள்ளவும்.

தவறும் பட்சத்தில் அந்த மாடுகள் ஆதரவற்ற மாடுகளாக கருதி அங்கீகாரம் பெற்ற விலங்குகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை உரிய பட்டிகள் அமைத்து பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஉள்ளார்.

மேலும் செய்திகள்