மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது: தமிழ்மகன் உசேனின் மருமகன் சாவு
தக்கலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேனின் மருமகன் பரிதாபமாக இறந்தார்.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறையை சேர்ந்தவர் அப்துல் ரகீம் (வயது 42). இவர், அ.தி.மு.க.வில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரான தமிழ்மகன் உசேனின் மருமகன் ஆவார். அதாவது தமிழ் மகன் உசேனின் தங்கை மகன் ஆவார்.
அப்துல் ரகீம், டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சுமையா (40). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் அப்துல் ரகீம், நாகர்கோவிலில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் வீடு திரும்பினார். நாகர்கோவில் –திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை தபால் நிலையம் அருகே வந்தபோது, திருவனந்தபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அப்துல் ரகீம் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.