போதுமான நிலக்கரி கையிருப்பு: மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்தில் உற்பத்தி தொடக்கம்
போதுமான நிலக்கரி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்தில் நேற்று இரவு மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர்,
சேலம் மாவட்டம், மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின்நிலையமும், 840 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல்மின்நிலையமும் இயங்கி வருகிறது. நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடந்த 20-ந் தேதி புதிய அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தற்போது போதுமான நிலக்கரி மேட்டூர் அனல்மின்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மதியம் முதல் புதிய அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தொடங்கின. இரவு முதல் மின் உற்பத்தி தொடங்கி விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி இரவில் மின் உற்பத்தி தொடங்கியது.
இதேபோல் பழைய அனல்மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 4 அலகுகளாக இயங்கி வருகிறது. இதில் 3-வது அலகில் கொதிகலன் குழாயில் கடந்த 15-ந் தேதி பழுது ஏற்பட்டது. இந்த பழுது நேற்று சரி செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை முதல் இந்த அலகிலும் நிறுத்தப்பட்டு இருந்த மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இதனால் மேட்டூர் பழைய அனல் மின்நிலையம் தனது முழு மின் உற்பத்தி திறனான 840 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பணி தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.