எச்.ராஜாவை கைது செய்யக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் வகுப்புகளை புறக்கணித்தனர்
எச்.ராஜாவை கைது செய்யக்கோரி திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவாரூர்,
காவல்துறையையும், நீதித்துறையையும் விமர்சித்து பேசிய பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். பல்கலைக்கழக தேர்வு கட்டணத்தை உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும், மேற்கு வங்காளத்தில் உரிமைகளை கேட்டு போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மம்தா பானர்ஜி அரசை கண்டித்தும் திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்்.
இதில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.