கார் மோதி நர்சிங் மாணவி பரிதாப சாவு 3 பேர் படுகாயம்
தேன்கனிக்கோட்டை அருகே கார் மோதி நர்சிங் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். இவருடைய மகள் அசீகா (வயது 19). இவர் நர்சிங் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் மகள் நிவேதிதா (18), கோபால் மனைவி அர்ச்சனா(25), சந்திரப்பா மகள் மாணிக்கியா(20). இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி அசீகா, நிவேதிதா, அர்ச்சனா, மாணிக்கியா ஆகிய 4 பேரும் அதே பகுதியில் உள்ள தங்கள் விவசாய தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.
அந்தநேரம் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அசீகா உள்ளிட்ட 4 பேர் மீதும் மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி அசீகா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.