சேவூர் அருகே நீரோடையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து டிரைவர், 9 பெண்கள் காயம்
சேவூர் அருகே நீரோடையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் டிரைவர் உட்பட 9 பெண்கள் காயமடைந்தனர்.
சேவூர்,
சேவூர் அருகே போத்தம்பாளையம் பகுதியில் நிலக்கடலை பறிக்கும் கூலி வேலைக்காக பல்வேறு ஊர்களில் இருந்து 9 பெண்கள் நேற்று சேவூர் வந்தனர். அவர்கள் சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் இருந்து ஒரு ஆட்டோவில் போத்தம்பாளையத்துக்கு புறப்பட்டனர். ராக்கம்பாளையம் அருகே குட்டகம் பிரிவில் செல்லும்போது, ஆட்டோ நிலைதடுமாறி அருகில் உள்ள நீரோடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 9 பெண்கள் மற்றும் டிரைவர் சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அவினாசி மற்றும், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.