தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை கூட்டம்
தி.மு.க.வின் பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை கவுன்சில் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
பெரம்பலூர்,
தி.மு.க.வின் பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை கவுன்சில் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் குள்ளபெத்தான், துணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன், துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜ்குமார், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கருணாநிதி மறைவு செய்தி கேட்டு துக்கம் தாளாமல் மரணம் அடைந்தவர்களுக்கு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டம், கூட்டங்களில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக இணைப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தொ.மு.ச.வின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் தொ.மு.ச.வின் அமைப்புகள் குறைவாக உள்ளது. எனவே அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்து உறுப்பினர்களை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செயலாளர் ரெங்கசாமி வரவேற்றார். முடிவில் பொருளாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.