பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிப்பு எச்.ராஜாவை கண்டித்து திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்
ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் எச்.ராஜாவை கண்டித்து திராவிடர் கழகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவராப்பட்டு கிராமத்தில் ஒரத்தநாடு–மன்னார்குடி சாலையில் பெரியார் படிப்பகம் உள்ளது. இதன் அருகே பெரியாரின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெரியார் சிலைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். இதை நேற்று காலை படிப்பகத்துக்கு வந்த கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதை அறிந்து அங்கு திரண்டு வந்த திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தூண்டுதலின் பேரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அவரை கண்டித்தும், பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் அருணகிரி, ஒன்றிய செயலாளர் லெட்சுமணன், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவர்கள் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு டயருக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியல் காரணமாக தஞ்சை–பட்டுக்கோட்டை சாலையில் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியலை தொடர்ந்து திராவிடர் கழகத்தினர் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், ஒரத்தநாடு பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.