இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சி பணிகள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு 390 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். (IOCL) எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் பைப்லைன் பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. டெக்னீசியன் பிரிவிலும், டிரேடு பிரிவிலும் பயிற்சிப் பணிகள் உள்ளன. மொத்தம் 390 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணிகளுக்கும். பட்டப்படிப்பு படித்தவர்கள் எச்.ஆர். மற்றும் அக்கவுண்டன்ட் பிரிவு டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 19-9-2018-ந் தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 12-10-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வருகிற நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை https://www.iocl.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.