மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

கிளியனூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ‘லிப்ட்’ கேட்டு சென்றவருக்கு நேர்ந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-09-23 22:00 GMT
வானூர், 


கிளியனூர் அருகே கீழ்கூத்தப்பாக்கம் தென்னகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 48). இவர் நேற்று முன்தினம் வெளியூர் சென்றுவிட்டு கிளியனூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரகுவரன் (24) என்பவர் மோட்டார் சைக்கிளில் கீழ்கூத்தப்பாக்கம் நோக்கி சென்றார். அவரை வழி மறித்த, மகேஸ்வரி ‘லிப்ட்’ கேட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றார்.

சாலையில் வேகமாக சென்றபோது திடீரென்று வேகத் தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது மகேஸ்வரி நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்