குடும்ப தகராறில் விபரீத முடிவு: 3 மகள்களுடன் பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

சேந்தமங்கலம் அருகே, குடும்ப தகராறில் பெண் தனது 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்றார். அவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2018-09-23 23:00 GMT
சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள சிவியாம்பாளையத்தை சேர்ந்தவர் வனராஜ் (வயது 56). இவர் நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி (48). இவர்களுடைய மகள்கள் கீதா (20), புனிதா (17), தேன்மொழி (15).

கடந்த சில நாட்களாக வனராஜூக்கும், இவரது மனைவி மகாலட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி தனது மகள்கள் 3 பேருக்கும் விஷத்தை கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் 4 பேரும் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 4 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்