கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி வேதாரண்யம் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா உம்பளச்சேரி, மகாராஜபுரம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைமடை பாசன பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் அடப்பாற்று மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த ஆண்டு கடைமடை பகுதியில் மேட்டூர் நீரை நம்பி சம்பா சாகுபடியை 10 ஆயிரம் எக்டேரில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் செய்திருந்தனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டும் ஒரு மாதத்துக்கும் மேலாகியும் அடப்பாற்றில் போதிய அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி உம்பளச்சேரியில் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்ணப்பன், நாகராஜன், வேதாரண்யம் தாசில்தார் ஸ்ரீதர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு கடைமடை பகுதிகளுக்கு நாளைக்குள் (அதாவது இன்று) தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலை மறியலால் திருத்துறைபூண்டி- தலைஞாயிறு சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போல் மகாராஜபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.