இரணியலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ரெயில் மறியல் முயற்சி 31 பேர் கைது
இரணியலில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியை சேர்ந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
அழகியமண்டபம்,
இரணியல் ரெயில் நிலையத்தில் ஏரநாடு மற்றும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு சார்பில் இரணியலில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று இரணியல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் பிற்பகல் 3 மணியளவில் இரணியல் ரெயில் நிலையம் முன் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். பின்னர், அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுதேசன், மறியல் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கிடையாது, எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதனால் போலீசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 16 பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திங்கள்சந்தையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தால் இரணியல் ரெயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.