நாகர்கோவிலில் பயங்கரம்: கலப்பு திருமணம் செய்த வாலிபர் வெட்டிக் கொலை
நாகர்கோவிலில் கலப்பு திருமணம் செய்த வாலிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் இளங்கடையை சேர்ந்தவர் செல்வம் (வயது 32), மீனவர். இவருடைய மனைவி சகானா. செல்வமும், சகானாவும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து வந்தனர். முதலில் இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் பல்வேறு எதிர்ப்புகளை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் செல்வம் நேற்று முன்தினம் கடைக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார். வீட்டின் அருகே வந்ததும் திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. அந்த கும்பலில் 4 பேர் இருந்ததாக தெரிகிறது. அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் வைத்திருந்தனர். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த செல்வம் உடனே தனது மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு தப்பிக்க முயன்றார்.
ஆனால் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் செல்வத்தை மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடித்துக் கொண்டனர். பின்னர் அரிவாளால் சரமாரியாக செல்வத்தை வெட்டினர். இந்த பயங்கர தாக்குதலில் அவரது கழுத்து உள்பட உடலின் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது.
இதில் நிலை தடுமாறிய செல்வம் கதறியபடியே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். எனினும் அந்த கும்பல் அவரை விடவில்லை. மீண்டும், மீண்டும் அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் அவர் மீது மோட்டார் சைக்கிளை சாய்த்து போட்டுவிட்டு மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தப்பிச் சென்றனர். சம்பவம் நடந்தது நள்ளிரவு என்பதால் அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இதனால் செல்வம் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததை யாரும் பார்க்கவில்லை.
இதற்கிடையே, கடைக்கு சென்ற கணவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், பதற்றம் அடைந்த சகானா தன் உறவினர்களை அழைத்துக் கொண்டு செல்வத்தை தேடிப் புறப்பட்டார். அப்போது வீட்டின் அருகிலேயே காதல் கணவர் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்து சகானா அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு ஆம்புலன்சு மூலம் செல்வத்தை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் இதுபற்றி கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து கொலை சம்பவம் நடந்த பகுதியில் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளனரா? என்று போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக செல்வம் தீர்த்துக் கட்டப்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வத்தின் நண்பர் ஒருவரை ஒரு கும்பல் தாக்கியதாக தெரிகிறது. அப்போது அவர்களை செல்வம் தட்டிக் கேட்டதோடு கண்டித்தும் உள்ளார். இதன் காரணமாக செல்வத்துக்கும், அந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உருவானது. மேலும் அவர்கள் செல்வத்தின் வீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சகானா கோட்டார் போலீசில் அளித்த புகாரின் பேரில் இளங்கடையை சேர்ந்த மனோ, சரக்கல்விளையை சேர்ந்த பிரதீப், பிரபு மற்றும் புத்தன்குளத்தை சேர்ந்த ரமேஷ் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அந்த 4 பேரும் தலைமறைவாக இருக்கிறார்கள். அந்த 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கலப்பு திருமணம் செய்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.