கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
அரியலூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
அரியலூர்,
அரியலூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பொய்யாமொழி, மத்திய மண்டல செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் மோகனரங்கன் சங்க செயலறிக்கையையும், மாநில பொருளாளர் அழகிரிசாமி சங்க நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர். முன்னாள் மாநில தலைவர் துரை ராசமாணிக்கம் வழிகாட்டுதல் உரையாற்றினார். மாநில அமைப்பு செயலாளர் அழகர்சாமி, மாநில துணைத் தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர் கூட்டத்தில், பொது மாறுதல் அரசு ஆணை கலந்தாய்வு முறையில் மட்டுமே அளிக்கவும், தேவையற்ற காலதாமத படுத்தப்படுவதையும் சில கோட்டங்களில் சிலரின் சுயலாபங்களுக்காக அளிக்கப்படும் மாறுதல்களை தவிர்க்கவும் வருவாய் நிர்வாக ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையதள சேவை இ அடங்கல் குறைபாடுகளை களைய தொழில்நுட்ப குழு ஆலோசனைகளை பெற்று அரசுக்கு அளித்து தீர்வு காண்பது. மாவட்ட பணிமாறுதல், பணிவரன் முறை ஆகியவற்றுக்கு அரசு ஆணைகளை மூன்று மாதத்திற்குள் வழங்க அரசை வலியுறுத்துவது. தமிழ்நாடு அரசு சிக்கனம் மற்றும் நிர்வாக சீரமைப்புக்கு ஆதிசேஷய்யா கமிட்டிக்கு அளிக்க வேண்டிய அறிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலர் தியாகராஜன் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.