கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் மணல் குவாரி? அரசை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 15 பேர் கைது
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் மணல் குவாரி தொடங்குவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபடுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதில் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபடுவதாக தெரிகிறது. அதனை கண்டித்து பொதுமக்கள், லட்சிய தி.மு.க.வின் அரியலூர் மாவட்ட தலைவர் வினோத், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம், சிம்பு ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நேற்று திடீரென்று கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரியலூரில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற வாகனங்களும், தஞ்சையில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற வாகனங்களும் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே அரசு சார்பில் தொடங்கப்பட்ட மணல் குவாரியால் ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் கொள்ளிடம் பாலம், அணைக்கரை பாலம் ஆகியவற்றின் தூண்களில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினர். மேலும் மணல் குவாரியால் நிறைய இடங்களில் குழிகள் காணப்படுகிறது.
இந்நிலையில் ஆற்றில் குளித்த திருமானூர் காந்தி நகரை சேர்ந்த சிறுவன் சூர்யா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஏற்கனவே மணல் குவாரி செயல்பட்டதால் தான் நிகழ்ந்துள்ளது. எனவே குடிநீர் ஆதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் அரசு மீண்டும் மணல் குவாரி தொடங்கும் முடிவினை கைவிட வேண்டும். இல்லையென்றால் தினமும் இது போன்ற போராட்டங்கள் பொதுமக்களை திரட்டி நடத்தப்படும் என்றனர். அப்போது போலீசார் நீங்கள் மறியலை கைவிடவில்லை யென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர். ஆனாலும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதனை தொடர்ந்து போக்குவரத்தை போலீசார் ஒழுங்கு படுத்தினர். கைது செய்யப் பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.