கன்னியாகுமரியில் வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

அகில இந்திய முகசீரமைப்பு நிபுணர்கள் சங்கம் சார்பில் சாலை விபத்து மற்றும் வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கன்னியாகுமரியில் நடந்தது.

Update: 2018-09-23 22:30 GMT

கன்னியாகுமரி,

அகில இந்திய முகசீரமைப்பு நிபுணர்கள் சங்கம் சார்பில் சாலை விபத்து மற்றும் வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கன்னியாகுமரியில் நடந்தது. போட்டியை முகசீரமைப்பு நிபுணர்கள் சங்க தலைவர் டாக்டர் வீரபாகு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் ராம்குமார், தினேஷ்குமார், ஜிம்சன், குணசீலன், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி சின்னமுட்டம் வரை நடந்தது.

இந்த மாரத்தான் போட்டி குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:–

ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு இன்றி செல்போன் பேசியபடி இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது. மேலும், புகையிலை, குட்கா, பாக்கு போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் வாய்புற்று நோய் ஏற்பட்டு முகம் பாதிக்கப்படுகிறது. எனவே, ஹெல்மெட் அவசியத்தை வலியுறுத்தியும், போதை பொருட்களை தவிர்க்க வலியுறுத்தியும் இந்த மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. அத்துடன், பிறவி குறைபாடான முகம் மற்றும் அன்னபிளவு போன்றவைகளை நவீன சிகிச்சை முறையால் சீரமைக்க முடியும் என்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்