பெண் விமானிகளின் பெருமை

உலக அளவில் விமானத்தை இயக்கும் பெண் பைலட்டுகளின் எண்ணிக்கை ஐந்து சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது.;

Update: 2018-09-23 08:54 GMT
லக அளவில் விமானத்தை இயக்கும் பெண் பைலட்டுகளின் எண்ணிக்கை ஐந்து சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது. ஆனால் இந்தியாதான் அதிக அளவிலான பெண் பைலட்டுகளை கொண்ட நாடாக திகழ்கிறது. இங்கு 12 சதவீதம் பெண் பைலட்டுகள் பணிபுரிகிறார்கள். சமீபத்தில், நியூயார்க்கில் இருந்து டெல்லி வரை இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தை பெண் பைலட்டுகள் இயக்கினார்கள். அதில் அமெரிக்க விஞ்ஞானி கிறிஸ்டின் லிகரே பயணம் செய்தார்.

பெண் பைலட்டுகள் விமானம் ஓட்டுவதை அறிந்து ஆச்சரியமடைந்த அவர், அதுபற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அது உலகம் முழுவதும் வைரலாக பரவியது. அதில், ‘நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு பெண் பைலட்டுகள் இயக்கிய விமானத்தில் பயணித்தேன். உலகில் அதிக பெண் விமான பைலட்டுகளை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. திட்டமிட்ட பயண நேரத்திற்கு முன்பாகவே விமானம் தரையிறங்கிவிட்டது. அந்த விமானத்தை பெண் பயணிகள் நேர்த்தியாக ஓட்டினார்கள். பயணம் இனிமையாக அமைந்தது. ஜெய் ஹிந்த்’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்