சிருங்கேரி சாரதா பீடத்தில் குமாரசாமி சிறப்பு யாகம்
ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் சிருங்கேரி சாரதா பீடத்தில் குமாரசாமி தனது குடும்பத்தினருடன் யாகம் நடத்தி வழிபட்டார். இதில் தந்தை தேவேகவுடா, சகோதரர் ரேவண்ணாவும் கலந்து கொண்டனர்.
சிக்கமகளூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியின் முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி இருந்து வருகிறார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் பரமேஸ்வர் உள்ளார். இந்த நிலையில் மந்திரி பதவி கேட்டு காங்கிரசை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்தை பயன்படுத்தி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக ஆபரேசன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்வதாகவும் குமாரசாமி, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் மந்திரி பதவி விவகாரத்தில் அதிருப்தியில் உள்ள காங்கிரசை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற கவர்னரிடம் கடிதம் கொடுக்க இருப்பதாகவும், பின்னர் அந்த 20 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பை செல்ல இருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்ட முதல்-மந்திரி குமாரசாமி சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரியில் உள்ள சாரதா பீடத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்த முடிவு செய்தார். இதற்காக அவர் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கொப்பாவுக்கு வந்தார். அங்குள்ள தங்கும் விடுதியில் அவர் தங்கியிருந்தார். அவருடன் மனைவி அனிதா குமாரசாமியும் உடன் வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் முதல்-மந்திரி குமாரசாமி, அனிதா குமாரசாமி, குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, தாய் சென்னம்மா, சகோதரரும், மந்திரியுமான எச்.டி.ரேவண்ணா, சிருங்கேரி தொகுதி எம்.எல்.ஏ. (காங்கிரஸ்) ராஜுகவுடா ஆகியோர் சாரதா பீடத்திற்கு வந்தனர். அங்குள்ள சந்திரசேகர மண்டபத்தில் குமாரசாமியும், அவரது குடும்பத்தினரும் சிறப்பு கணபதி ஹோமம் நடத்தினர். அதையடுத்து பவித்ரா வனத்தில் உள்ள சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி பாரதிய தீர்த்த சங்கராச்சாரியாரிடம் முதல்-மந்திரி குமாரசாமியும், அவரது குடும்பத்தினரும் ஆசி பெற்றனர். அதன் பின்னர் குமாரசாமி, பாரதிய தீர்த்த சங்கராச்சாரியாருடன் சுமார் 45 நிமிடம் வரை தனியாக சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தற்போது கர்நாடக அரசியலில் நிலவும் குழப்பம் பற்றியும் ஆட்சியை தக்க வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சந்திப்பு முடிவடைந்த பிறகு குமாரசாமி தனது குடும்பத்தினருடன் சாரதாம்பாள் கோவிலுக்கு வந்தார். அங்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் குமாரசாமி குடும்பத்தினருடன் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அதையடுத்து அருகில் உள்ள சக்தி கணபதி கோவிலிலும் அவர் பூஜை செய்து வழிபட்டார்.
அந்த கணபதி கோவிலில் அவர் 11 சிதறு தேங்காய்களை உடைத்தார். அப்போது ஒரு தேங்காய் மட்டும் உடையவில்லை. அந்த தேங்காயை அர்ச்சகர்கள் எடுத்து கொடுத்தனர். பின்னர் அந்த தேங்காயை உடைத்தார். குமாரசாமி நேர்த்திக்கடனாக தேங்காய்களை உடைத்த போது ஒரு தேங்காய் முதலில் உடையாததால் அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் சலசலப்பும் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து மீண்டும் குமாரசாமியும், அவரது குடும்பத்தினரும் யாகம் நடந்த சந்திரசேகர மண்டபத்துக்கு சென்றனர். அங்கு இறுதியாக நடந்த பூர்ணாஹுதியில் அவர்கள் கலந்துகொண்டனர். நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய யாகம் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் தற்போது தனது தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஆட்சியை தக்க வைக்க குமாரசாமி சாரதா பீடத்தில் சிறப்பு யாகம், பூஜை நடத்தியதாக பரபரப்பாக பேசப்பட்டது.