மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில்

மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-09-22 22:41 GMT

மும்பை,

மும்பை வெர்சோவா போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி காலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது மிலட்நகர் பகுதியில் நின்று கொண்டு இருந்த ஆட்டோவில் பெண் ஒருவர் உதவி கேட்டு சத்தம் போட்டு கொண்டு இருந்தார். இதை கவனித்த போலீசார் அந்த ஆட்டோ அருகே சென்று பார்த்தனர்.

அப்போது ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த பெண்ணை கற்பழித்து கொண்டு இருந்தார். இதையடுத்து போலீசார் உடனடியாக அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், அவர் மலாடு பகுதியை சேர்ந்த உமர் செய்யது (வயது57) என்பதும், அவர் 43 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி கற்பழித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

மேலும் செய்திகள்