மக்களுக்கு அதிக விலைக்கு மணலை விற்க அரசு முயற்சி செல்ல.ராசாமணி குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் இறக்குமதி மணல் ஆன்-லைன் விற்பனை தொடர்பாக உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டு, மக்களுக்கு அதிக விலைக்கு மணலை விற்பனை செய்ய அரசு முயற்சிப்பதாக நாமக்கல்லில் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
நாமக்கல்,
தூத்துக்குடி துறைமுகத்தில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை ஒரு யூனிட் ரூ.9 ஆயிரத்து 990 என விலை நிர்ணயம் செய்து, அதை இணையதளத்தில் பதிவு செய்தும், “ TNs-a-nd ” பதிவேற்றம் செய்யாத லாரிகளுக்கும் மணல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதை வன்மையாக கண்டிக்கிறோம். இது நடைமுறைக்கு வந்தால் லாரி உரிமையாளர்கள், பயனாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் அரசால் இயங்கக்கூடிய அனைத்து அரசு மணல் விற்பனை நிலையத்திலும் ஒரு யூனிட் மணல் ரூ.1,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை ஒரு யூனிட்டிற்கு 8 ஆயிரத்து 660 ரூபாயை கூட்டி விற்பது பகல் கொள்ளையாகும்.
மேலும் புதுக்கோட்டையை சேர்ந்த தனியார் நிறுவனம் இறக்குமதி செய்த 50 ஆயிரம் டன் மணலை எந்த இடையூறும் செய்யாமல் அரசு விற்பனை செய்ய அனுமதித்து இருந்தால் ஒரு யூனிட் மணலை அவர்கள் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்திருப்பார்கள்.
தேவை இல்லாமல் அரசு அதை தடை செய்ததோடு, தற்போது வழக்குத்தொகை, துறைமுகத்தின் வாடகை என அனைத்தையும் சேர்த்து ரூ.9 ஆயிரத்து 990-ஐ மணல் விலையாக நிர்ணயித்து உள்ளது. இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரசு இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
குறைந்த விலையில் மணல் கட்டுமான பணிக்கு கிடைக்க உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அரசே நேரடியாக வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்து ஆன்-லைன் பதிவு மூலம் லாரிகளுக்கு வழங்க வேண்டும். அல்லது வெளிநாடுகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் மணலிற்கு அரசின் பொதுப்பணித்துறை தரச்சான்று வழங்கி உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் பல்வேறு தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு மணலை இறக்குமதி செய்வார்கள். மணல் தட்டுப்பாடும் குறையும். விலையும் குறையும். எனவே இந்த விஷயத்தில் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதேபோல் தூத்துக்குடியில் இறக்குமதி மணல் விற்பனை ஆன்-லைனில் தொடங்கப்பட்டவுடன் 11 ஆயிரம் யூனிட் மணல் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அது முற்றிலும் தவறு. ஆனால் வெறும் 3 லாரிகள் மட்டுமே புக்கிங் செய்து உள்ளது. உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டு, அரசு மக்களுக்கு அதிக விலைக்கு மணலை விற்பனை செய்ய முயற்சிக்கிறது.
இவ்வாறு சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.