மீனவர்களுக்கு நிவாரண தொகை கலெக்டர் சுப்பிரமணியன் அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி நிவாரண தொகை வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;
விழுப்புரம்,
மீனவர்களுக்கு மீன்பிடி நிவாரண தொகை வழங்கப்பட இருப்பது குறித்து கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற இதுவரை அச்சடித்த படிவங்கள் உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. நலத்திட்ட உதவிக்கான விண்ணப்பங்களை உரிய காலத்தில் விண்ணப்பிக்கவும், அரசின் நலத்திட்ட உதவிகளை விரைவாக பெறவும் ஏதுவாக இனிவரும் காலங்களில் மீன்வளத்துறையின் இணையதளத்தின் மூலமாக மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தை முன்னோடியாக செயல்படுத்த மரக்காணம், வானூர் ஆகிய தாலுகாவிற்குட்பட்ட மீனவ கிராம பகுதியில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் சேவையை பயன்படுத்தி நடப்பாண்டிற்கான மீன்பிடி குறைந்தகால நிவாரண தொகை ரூ.5 ஆயிரம் வீதம் ஒவ்வொரு மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
எனவே இ-சேவை மையத்தில் சேவை கட்டணமாக ரூ.15 செலுத்தி இணையதளத்தில் நேரடியாக மீனவ பயனாளிகள் தங்களுடைய விவரங்களை பதிவேற்றம் செய்து, நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.