5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
தஞ்சை அருகே 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளரை ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சையை அடுத்த வாண்டையார் இருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 48). இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளியில் வழங்கிய மதிய உணவை சாப்பிட்டு விட்டு கை கழுவ சென்றுள்ளார்.
அப்போது அந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்த ரவிச்சந்திரன் கை கழுவ வந்த மாணவியை சத்துணவு கூடத்தில் உள்ள தனி அறைக்கு அழைத்து சென்று மாணவியை தகாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வலி தாங்க முடியாமல் மாணவி அலறியடித்துக்கொண்டு பள்ளி தலைமை ஆசிரியையிடம் வந்து நடந்ததை கூறி கதறி அழுதுள்ளாள்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியை ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றிருந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்துள்ளனர். உடனே பள்ளியில் இருந்து சத்துணவு அமைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமறைவாகி விட்டார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சத்துணவு அமைப்பாளர் ரவிச்சந்திரன் மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் ரவிச்சந்திரனை தேடி வாண்டையார் இருப்பு சென்றுள்ளனர். அங்கு ரவிச்சந்திரன் இல்லாததால் அவரின் மனைவி மற்றும் மகனை விசாரிப்பதற்காக வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதனை அறிந்த ரவிச்சந்திரன் நேற்று மதியம் வல்லம் போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வல்லம் போலிசார் சம்பவம் நடந்த வாண்டையார் இருப்பு பள்ளியிலும் விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர் ரவிச்சந்திரனுக்கு கல்லூரியில் படிக்கும் இரண்டு மகன்களும், சென்னையில் வங்கி ஒன்றில் பணியாற்றி கொண்டிருக்கும் மகள் ஒருவரும் உள்ளனர்.