வளர்ச்சி குறைபாடு உள்ள பெண்ணின் 30 வார கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி
20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சி அடைந்த கருவை கோர்ட்டில் முறையான அனுமதி பெற்றபின்னரே கலைக்க முடியும்.
மும்பை,
மும்பை ஐகோர்ட்டில் தன் மனைவியின் 30 மாத கருவை கலைக்க அனுமதி கேட்டு ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதில், “தங்களுக்கு ஏற்கனவே மன வளர்ச்சி குன்றிய 5 வயதான மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தைக்கு போதிய வளர்ச்சி இல்லாதது தெரியவந்துள்ளது.
இந்த குழந்தையின் பிறப்பு தாய்க்கு மனரீதியாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே அவரின் கருவை கலைக்க கோர்ட்டு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரின் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, டாக்டர்களின் பரிந்துரையை கேட்டறிந்து பெண்ணின் 30 வார கருவை கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.