முதல்-மந்திரி குமாரசாமியை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
வீதிக்கு வந்து போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த முதல்-மந்திரி குமாரசாமியை கண்டித்து பா.ஜனதா வினர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அமைக்க பா.ஜனதா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக ஆபரேஷன் தாமரை திட்டத்தை அக்கட்சி தொடங்கியுள்ளது. இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி ஆட்டம் கண்டு வருகிறது.
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் திரண்டு வந்து போராட வேண்டும் என்று குமாரசாமி பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இதை வன்மையாக கண்டித்துள்ள பா.ஜனதா, குமாரசாமி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
எதிர்க்கட்சிக்கு எதிராக மக்களை போராட தூண்டியதாக குமாரசாமியை கண்டித்து இன்று (அதாவது நேற்று) பா.ஜனதா சார்பில் அனைத்து மாவட்டங்களி லும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பெங்களூரு நகர பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் குமாரசாமியை கண்டித்து பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பா.ஜனதாவினர் குமாரசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் பேசிய ஆர்.அசோக் பேசியதாவது:-
எதிர்க்கட்சிக்கு எதிராக மக்கள் திரண்டு வந்து போராட வேண்டும் என்று முதல்-மந்திரி அழைப்பு விடுப்பது கண்டிக்கத்தக்கது. இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. நக்சலைட்டுபயங்கரவாதிகளை போலவே குமாரசாமி பேசுகிறார்.
உங்களால் முடிந்தால், உங்கள் எம்.எல்.ஏ.க்களை பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். காங்கிரசை சேர்ந்த 20 எம்.எல். ஏ.க்கள் மும்பை செல்ல இருப்பதாக முதல்-மந்திரியே கூறி இருக்கிறார். உங்கள் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாமல் அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். உங்களின் குறைகளை மூடி மறைக்க எங்கள் கட்சியை விமர்சிப்பது சரியல்ல.
நாங்கள் விலைக்கு வாங்கவில்லை
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. எந்த எம்.எல்.ஏ.க்களையும் நாங்கள் விலைக்கு வாங்கவில்லை. ஆட்சியில் எழுந்துள்ள குழப்பத்திற்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை.
இவ்வாறு ஆர்.அசோக் பேசினார்.
இதில் ஷோபா எம்.பி. பேசியதாவது:-
“கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை கெடுக்கும் வகையில் முதல்-மந்திரி பேசி இருக்கிறார். ஒரு முதல்-மந்திரி இவ்வாறு பேசியது இதுவே முதல் முறை ஆகும். குமாரசாமி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்துள்ளோம்.
ஆட்சி பறிபோகும் என்ற பீதி ஏற்பட்டுள்ளதால் குமாரசாமி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். காங்கிரசார் எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கலாட்டா செய்தனர். எடியூரப்பாவுக்கு ஏதாவது நடந்திருந்தால் என்ன ஆவது?. ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. சமானிய மக்களின் கதி என்ன?”.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைதொடர்ந்து ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பேசுகையில், “முதல்-மந்திரி குமாரசாமி பயங்கரவாதியை போல் பேசுகிறார். பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் திரண்டு வந்து போராட வேண்டும் என்று முதல்-மந்திரி அழைப்பு விடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. குமாரசாமி மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும்” என்றார்.
இதே போல் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் குமாரசாமியை கண்டித்து பா.ஜனதா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.