மக்கள் நலத்திட்டங்களை வழங்க முதல்-அமைச்சரும், கவர்னரும் இணைந்து செயல்பட வேண்டும், அசனா எம்.எல்.ஏ. அறிக்கை
மக்கள் நலத்திட்டங்களை வழங்க முதல்-அமைச்சரும், கவர்னரும் இணைந்து செயல்படவேண்டும் என்று அசனா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
காரைக்கால்,
காரைக்கால் தெற்கு தொகுதியை சேர்ந்த அசனா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்களை புதுவை அரசு கடந்த பல ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது. ஆனால் அண்மை காலமாக ஆளும் அரசுக்கும், கவனருக்கும் இடையே நல்லுறவு சரியாக இல்லாததால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் உள்ளன.
எனது தொகுதியில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை பெறுவதற்கு 2015-ம் ஆண்டில் இருந்து சுமார் 900 பயனாளிகள் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு உதவித்தொகை வழங்காமல் நிலுவையில் உள்ளது. இதேபோல 2013-ம் ஆண்டில் இருந்து திருமண உதவித்தொகை, ஆதரவற்ற விதவை மகள் திருமண உதவித்தொகை, குடும்ப கட்டுபாடு உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது.
அறிவிப்பாகவே உள்ளது
மேலும் பல திட்டங்களில் உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ஏராளமான மக்கள் அன்றாட செலவிற்கு இந்த தொகையைத்தான் நம்பி உள்ளார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முதல்-அமைச்சரும், கவர்னரும் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மக்கள் நலத்திட்டங்களை உடனுக்குடன் அரசு வழங்க வேண்டுமென்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பலமுறை அரசுக்கு தெரிவித்தேன். அதன்பேரில் உடனடியாக உதவித்தொகையும், இலவச அரிசியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த அறிவிப்பு அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இதனால் அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை மக்கள் இழந்து வருவது மிகவும் தெளிவாக தெரிகிறது. எனவே மக்கள் நலத்திட்டங்களை முதல்-அமைச்சரும், கவர்னரும் இணைந்து செயல்படுத்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.