பிரதமர் மோடி பற்றிய குறும்படத்தை 15 லட்சம் மாணவர்கள் பார்த்துள்ளனர் - பட்னாவிஸ் தகவல்
பிரதமர் மோடியின் பால்ய வாழ்க்கையை தழுவி எடுக்கப்படடு உள்ள குறும்படம் ‘சலோ ஜீத்தே ஹை'. இந்த படம் மராட்டியத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக திரையிடப்பட்டு வருகிறது.
மும்பை,
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் பால்ய வாழ்க்கை பற்றிய குறும்படத்தை மராட்டியத்தில் உள்ள 16 ஆயிரம் பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவ, மாணவிகள் பார்த்து உள்ளனர்.
இதுதவிர வெளிநாடுகளிலும் 60 ஆயிரம் பேர் பார்த்து இருக்கிறார்கள் என தெரிவித்து உள்ளார்.