ரூ.92 லட்சம் செலவில் தீயணைப்பு ‘ரோபோ’ வாங்க மும்பை மாநகராட்சி முடிவு
ரூ.92 லட்சம் செலவில் தீயணைப்பு ‘ரோபோ’ வாங்க மும்பை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
மும்பை,
மும்பை பெருநகரத்தில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. தீ விபத்துகள் கொத்து, கொத்தாக உயிர் பலிகளும் வாங்கி வருகின்றன. மேலும் தீயணைப்பு பணியின் போது, தீயணைப்பு படையினரும் காயம் அடைகிறார்கள். இதை தடுப்பதற்காக மும்பையில் பெரிய தீ விபத்துகளின் போது, அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ரோபோவை தீயணைப்பு பணியில் ஈடுபடுத்த மும்பை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
இதற்காக ரூ.92 லட்சம் செலவில் தீயணைப்பு ரோபா வாங்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு மாநகராட்சி நிலைக்குழு நாளை (வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாநகராட்சி நிலைக்குழு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அடுத்த 6 மாதத்தில் தீயணைப்பு ரோபோ வாங்கப்படும். தீ விபத்து ஏற்படும் இடத்துக்கு மினி லாரியில் இந்த ரோபோ கொண்டு வரப்படும். ரோபோவுடன் தானியங்கி ஏணியும் இருக்கும். 700 டிகிரி சென்டிகிரேடு ெவப்பத்திலும் ரோபோவை கொண்டு தீயணைப்பு பணிக்கு பயன்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.