லால்பாக் ராஜா மண்டலுக்கு தங்கத்திலான விநாயகர் சிலை காணிக்கை
லால்பாக் ராஜா மண்டலுக்கு ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினால் ஆன விநாயகர் சிலை காணிக்கையாக கிடைத்து உள்ளது.
மும்பை,
மும்பையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா மண்டலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள விநாயகர் சிலையை தரிசனம் செய்தவற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் லால்பாக் ராஜா விநாயகரை தரிசனம் செய்தனர்.
லால்பாக் ராஜா விநாயகர் சிலையை தரிசனம் செய்யும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், லால்பாக் ராஜா மண்டலுக்கு அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் தங்கத்தினால் ஆன விநாயகர் சிலை ஒன்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி உள்ளார்.இந்த சிலை 1 கிலோ 200 கிராம் தங்கத்தினால் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.42 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, மண்டலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணமும் எண்ணப்பட்டு வருகின்றன.