பிரபலமானவர்களின் வாகனம் கார், பைக் பிரியர் எம்.எஸ்.டோனி
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் ரசிகர்களால் விரும்பப்படுபவர் மகேந்திர சிங் டோனி.
கிரிக்கெட்டின் மீது மட்டுமல்ல கார், மோட்டார் சைக்கிள்கள் மீதும் இவருக்கு தீராத ஆசை உண்டு.
உலகின் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள், கார், ஜீப் உள்ளிட்ட அனைத்தும் இவரிடம் இருக்கிறது. இதில் இருந்தே இவரது ஆட்டோமொபைல் காதலை புரிந்து கொள்ள முடியும்.
இவரது காரேஜில் இருக்கும் கார், ஜீப், மோட்டார் சைக்கிளைப் பட்டியல் போட்டால் அது நீண்டு கொண்டே போகும். பெராரி 599 ஜி.டி.ஓ., யமஹா ஆர்.டி. 350 உள்ளிட்டவை இதற்கு சில உதாரணங்களாகும்.
ஆடி க்யூ 7, ஹம்மர் ஹெச். 2, மிட்சுபிஷி பஜேரோ எஸ்.எப்.எக்ஸ். மற்றும் அவுட்லாண்டர், மஹிந்திரா ஸ்கார்பியோ, லேண்ட் ரோவர் பிரீலாண்டர் 2 உள்ளிட்ட கார்களும் மோட்டார் சைக்கிள்களில் கான்பெடரேட் ஹெல்காட் எக்ஸ் 132, கவாஸகி நின்ஜா ஹெச். 2, நின்ஜா இஸட் எக்ஸ் 14 ஆர், யமஹா ஆர்.டி. 350, ஹார்லி டேவிட்சன் பேட்பாய், யமஹா தண்டர் கேட் உள்ளிட்டவையும் இவரிடம் உள்ளன. ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் பறக்கும் பழக்கமும் இவருக்கு உண்டு.