பெட்ரோல்-டீசல் விலை தலா 10 காசு உயர்வு பெட்ரோல்- ரூ.89.44; டீசல்- ரூ.78.51

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றும் தலா 10 காசுகள் உயர்ந்தது.

Update: 2018-09-18 23:02 GMT

மும்பை,

நாடு முழுவதும் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருவது பெட்ரோல்-டீசல் விலை தான். இன்று எவ்வளவு உயர்ந்திருக்கிறது? என்று ஆவலுடன் செய்தித்தாளை புரட்டும் அளவு மக்களின் கவனத்தை பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் ஈர்த்து இருக்கிறது. அதேவேளை மக்களின் கோபத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக பெற்று வருகிறது.

பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும், போராட்டங்கள் பல நடத்தப்பட்டு வரும் நிலையிலும் நேற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்தது.

மும்பையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 89 ரூபாய் 44 காசுகள் என விற்பனை ஆனது. நேற்று 10 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 54 காசுகள் என பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல நேற்று முன்தினம் 78 ரூபாய் 41 காசுகளுக்கு விற்பனையான டீசல் விலை நேற்று 10 காசுகள் உயர்ந்து 78 ரூபாய் 51 காசு என விற்பனை ஆனது.

இந்த நிலையில், மாநிலத்தின் ஜால்னா, பர்பாணி, கட்சிரோலி, சிந்துதுர்க், அவுரங்காபாத், நாந்தெட் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் விலை 90 ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. பர்பாணியில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 92 ரூபாய் 39 காசுகளுக்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்