கார் பகுதியில் 363 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் 5 பேர் கைது

மும்பை கார் பகுதியில் 363 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-18 22:44 GMT

மும்பை,

மும்பை கார் பகுதியில் சிலர் பாலில் கலப்படம் செய்து வருவதாக உணவு மற்றும் மருந்து துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் போலீசாருடன் சென்று குறிப்பிட்ட ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது, பிரபல நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை பிரித்து அதில் இருந்து பாதியளவு பாலை வெளியே எடுத்து விட்டு 5 பேர் தண்ணீரை கலந்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அங்கிருந்த 363 லிட்டர் கலப்பட பால் மற்றும் பால் பாக்கெட்டில் கலப்படம் செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் மலாடு மற்றும் கோரேகாவில் நடத்தப்பட்ட சோதனையில் பாலில் கலப்படம் செய்ததாக பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.


மேலும் செய்திகள்