தமிழக அரசை கண்டித்து சென்னையில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசை கண்டித்து சென்னையில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெறுவதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்தும் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
தலைமை நிலைய செயலாளர் பூச்சிமுருகன், ப.மோகன் எம்.எல்.ஏ. உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான், மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசு, பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன், மகளிரணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசை கண்டித்தும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின்போது ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதில் கூட ஊழல் நடந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கு அதற் கான டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு ரூ.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.20 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. எங்கள் தலைவர் கருணாநிதிக்கு அரசு மரியாதை அளித்தது பற்றி கடம்பூர் ராஜூ தரக்குறைவாக கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். சட்டசபையில் அவரிடம் நேருக்கு, நேராக நான் விவாதித்துக்கொள்கிறேன். கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் கொடுக்காதவர்களுக்கு சுடுகாட்டில் கூட இடம் கிடைக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சென்னை கந்தன்சாவடியில் உள்ள ராஜீவ்காந்தி சாலையில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அரவிந்த்ரமேஷ், வாகை சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் கண்டன உரையாற்றினார். எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா, இ.கருணாநிதி ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், தாம்பரம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் காமராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் வ.க.ரவி இந்திரன், செல்வகுமார், ஜோதிகுமார் உள்பட ஏராளமான தி.மு.க. வினர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊழல் புகாரில் சிக்கியவர்கள் பதவி விலகக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.